சோத்துக்கு லாட்டரி ..

பிப்ரவரி 16, 2009

இந்தியாவின் சொந்த ஜெட் பைட்டர் விமானம்.

Filed under: அரசியல் நையாண்டி — சோத்துக்கு லாட்டரி @ 5:25 முப

இந்தியாவின் சொந்த ஜெட் பைட்டர் விமானம்.

தமிழர்களை இனபடுகொலை செய்ய இந்தியா எம்புட்டோ உதவி செய்யுது. லேட்டஸ்டா மஹிந்தா-வுக்கு நிறைய விமானம் தேவை படுற செய்தயை கேள்விப்பட்டு …

இந்தியாவின் சொந்த ஜெட் பைட்டர் விமானம்

இந்தியாவின் சொந்த ஜெட் பைட்டர் விமானம்

பிப்ரவரி 13, 2009

கலைஞர் நல்லவரா கெட்டவரா? – கருத்து கணிப்பு

Filed under: கருத்து கணிப்பு — சோத்துக்கு லாட்டரி @ 8:58 பிப

கலைஞர் நல்லவரா கெட்டவரா? – கருத்து கணிப்பு

கலைஞர் உருவாக்கியுள்ள சகிப்புதன்மை ..

Filed under: வாழ்க்கை — சோத்துக்கு லாட்டரி @ 8:25 பிப

அப்பொழுது நான் எட்டாவதோ ஒன்பதாவதோ ஜெயராஜ் நாடார் பள்ளியில்  படித்துக்கொண்டு இருந்தேன்.  அதுக்கப்புறம் பத்தாவதில் கணக்கில் பெயில் ஆனதால் எதுவும் படிக்க வைக்கப் படவில்லை. எங்க அய்யா நீ இங்கிலீஸ்ல பெயிலாயிருந்தா கூட சும்மா விட்டிருப்பேன்.. கணக்குல போய் கோட்டை விட்டுடியேடா ராஸ்கல் என்று எனக்கு சூடு போட்டு – அன்றுடன் அவருக்கும் எனக்குமான உறவிற்கு மணி அடித்துவிட்டார்.  அவரை பொறுத்தவரை கூட்டல், கழித்தல், பெருக்கல் மற்றும் வகுத்தல் ஆகிய நான்கே கணிதம் எனப்படுவது. எனக்கு அந்த நான்குடன் ‘வெண்’  படம் ( அதாங்க வட்ட வட்டமா படம் போடுவாங்களே )  போடுவதும் தெரியும். ஆனா பரிச்சயிலோ sin, cos, xy-x2 நு என்ன என்னமோ கேட்டு என்னை பெயிலாக்கி விட்டார்கள். நான் எங்க பள்ளி கணக்கு வாத்தியாரிடம் டியுசன் படிக்காததும் அதனால் அவர் பேப்பர் சேஸ் பண்ணி என்னை பெயிலாக்கி இருக்கலாம் என்ற செய்தியும் உலவியது. அது அந்த காலகட்டத்தில் மிகவும் நம்பகமான செய்தியாகியதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று: இப்படி செய்தியை கிளப்பி அடுத்தவருடம் எல்லா மாணவர்களையும் அவரது டியுசனில் படிக்கும்படி பார்த்து நல்ல வருமானம் பார்த்துவிட்டார். இரண்டு ஆங்கிலம் பாஸ் ஆகும் அறிவு இருக்கும் யாரும் – என் பள்ளியில் கணக்கில் பெயில் ஆக முடியாது. ஏனெனில் எங்க கணக்கு வாத்தியார் அம்புட்டு கெட்டிகாரராம். அவரது பிரம்புக்கு பேனாவை கொடுத்தால் அது பரிச்சை எழுதி நூத்துக்கு நூறு வாங்கி விடுமாம். நல்ல வேலை அது எங்களது டவுசரை முத்தமிடுவதோடு நிறுத்திக் கொண்டது .

ஒரு நாள் பள்ளி முடிந்து வீடு நோக்கி அப்பொழுதைய பாண்டியன் பேருந்தில் (  இந்த நீ, நான், உதடு கப்சாவெல்லாம் எழுதப்படாத, திருவள்ளுவர் படம் மட்டும் ஒட்டிய  , கண்ட கண்ட லேகிய மருந்து ஸ்டிக்கர் ஒட்டாத, அங்கங்கே  ரமா லவ்ஸ் ராம் ( அதாவது ஒரு ஆர்ட்டின் படமும் அதனில் கொடூரமாக பாயும் அம்பும் )  மாதிரியான கிறுக்கல்கள் இருக்கும் பேருந்து ) வந்து கொண்டிருந்தேன். பஸ் கிளம்பிய பத்து நிமிடங்களில் பக்கக்த்து ஊரின் பேருந்து நிறுத்தத்தில் நின்றது. வெகு நேரமாகியும் நகரவே இல்லை. சரி நம்ம தான் எப்பவும் போல எறங்கி தள்ளனும் போல என்று சலித்து ” இளவட்ட பசங்க எலாம் இருங்குங்க ” ன்ற மாதிரியான அப்கிரேட் மரியாதை அழைப்பிற்காக காத்திருக்கும் சிறுவர்களில் நானும் ஒருவனாக அமர்ந்திருந்தேன். ஸ்டாப்-பில் பஸ் நிர்ப்பதால் கண்டக்டருக்கோ டிரைவருக்கோ வேண்டப்பட்டவர்கள் வருவதற்க்காக தான் நிற்கிறது என்று நினைத்து கொண்டேன்.

அப்பொழுது தான் கவனித்தேன் மக்கள் கூட்டம் கூடமாக ரோட்டில் அமர்ந்தும் நின்றும் கொன்றுப்பதை. சரி, எப்பவும் போல தண்ணி பிரச்சனை , சாலை மறியல் என்று நினத்திருந்தேன். ஆனால் ரோட்டில் மேடை போடப்பட்டிருந்தது. எனது மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. சும்மாவா பின்னே – மருதம், விருந்து போன்ற புத்தங்களில் மட்டும் பார்த்திருந்த ஆடைகளில் சில பெண்கள் குத்தாட்டம் ஆடுவதை பார்ப்பதென்றால்.  இந்த மாதிரி சமயங்களிலும் வீட்டில் அம்மா அப்பா இல்லாத வெள்ளி இரவுகளில் ( வருடத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை அப்படி அமையும். ” எங்க வீட்ல தீவாளிக்கு டிரஸ் எடுக்க போயிட்டாங்களே “) ஒளியும் ஒலியும்  நிகழ்ச்சியில் எனக்கு அதிர்ஷ்ட்டம் இருந்தால் வரும் கவர்ச்சி பாடல்களிலும் எனது தீவாளி ஒழிந்திருந்தது.  அதனால் பஸ்ஸை விட்டு இறங்கி  மேடை காட்சிகளை  பார்க்க தயாரானேன்.

சில நிமிடங்களில் ஒருவர் திமுக கரை வேட்டியில் வந்து மைக்கை புடித்தார். சரி, இந்த ஆள் தான் கொடை வள்ளல், சீக்கிரம் பேசி முடித்தபின் அடுத்து டான்ஸ் என்று நினைத்திருந்த எங்களுக்கு இது அரசியல் மேடை என்பதை  புரிந்து கொள்ள இரண்டு நாட்கள் ஆகியது. அந்த மேடையில் அந்த திமுக கரை வேட்டி கட்டியவர் பேசும் பொழுது “கருணாநிதியுன்” என்று மொட்டையாக தவறுதலாக சொல்லி விட்டார். அவர் தான் மறந்துவிட்ட “அவர்களையோ” அல்லது ” கலைஞர் ” அடை மொழியையோ உணர்வதற்கு முன் செருப்பு ஒன்று பறந்து வந்து அவரது முகத்தை பதம் பார்த்தது. அப்பொழுதெல்லாம் இப்பொழுதை போல் “மாண்புமிகு” ரெம்ப பேமஸ் கிடையாது. அவர் இரண்டு நிமிடங்களில் வணக்கத்தை கூட சொல்லி முடிக்க முடியாமல், எழுபத்தஞ்சு பைசா கோலி சோடாவை கூட குடிக்க முடியாதவராய் பேச்சை முடித்துக்கொண்டார்  – ஒரு திமுக வேட்டி கட்டிய நபர் !!நிற்க!!

சென்ற வாரம் கோவை செல்வதற்காக ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தேன் . அப்பொழுது, இப்பொழுதைய முதல்வருக்கு எவ்வளவு கெட்ட வார்த்தைகளை அடைமொழி கொடுக்க முடியுமோ அவ்வளவு அடை மொழியுடன் அழைத்து, இருவர் அரசியல் பேசி கொண்டிருந்தனர். முதலில் தண்ணி அடிதிருக்காரோ என்ற சந்தேகம் வந்தது. பின்பு அருகில் நின்று “எஸ் எம் எஸ் ” அனுப்புவது போன்று நடித்து கவனித்ததில் அவர் மிக தெளிவாக இருக்கிறார் என்பது தெரிந்தது. அவர்களுக்கு வயது இருபதுகளீல் தான் இருக்கும். அவரின் பக்கத்தில் இருப்பவர்கள் – பாண் பராக் மென்று கொண்டு – அவிச்ச கடலை தின்று கொண்டு – யாரும் அவரின் எந்த பேச்சையும் மரியாதையை குறைவாக எடுத்து கொள்ளாமல்  அவரவர் வேலையே செய்து கொண்டிருந்தனர். இத்தனைக்கும் அவர், அவரை  சுற்றி குறைந்தது பத்து பேருக்காவது கேட்கும்படி தான் பேசி கொண்டிருந்தார் .   இரவு பாத்து மணி வாக்கில் – அதாவது யார் வேண்டுமாலும் எளிதில் அவரை  அடிக்க கூடிய  மதுரை இரவு.

தமிழக மக்களுக்கு சகிப்புத்தன்மையும் பகுத்தறிவும் வேண்டும் தான் – அதை சொல்லிதர கலைஞர் அவர்கள் ஈழ தமிழர்களையும் முத்துகுமரன் போன்ற தமிழக தமிழர்களையும் பழி கொடுக்கிறார் என்ற பொழுது; கண்கள் ஈரமாகிறது .

பிப்ரவரி 12, 2009

கலைஞருக்கும் ராமதாசுக்கும் நன்றி

Filed under: Uncategorized — சோத்துக்கு லாட்டரி @ 5:29 முப

கலைஞருக்கும் ராமதாசுக்கும் நன்றி

சிங்களவனின் நன்றி - தமிழனை கொள்வதற்கு

சிங்களவனின் நன்றி - தமிழனை கொள்வதற்கு

முத்தின தலைவரும் மூத்திர தலைவரும் …

Filed under: கவிதைகள் — சோத்துக்கு லாட்டரி @ 12:46 முப

அமைதி  காலத்திலும்
மக்களின் நலனிற்காக
தொண்ணூறு  வயதுகளிலும்
மூத்திர  சட்டியுடன்  போராடினார்
பெரியார்.

இன அழிப்பு காலத்திலும்
தன் மக்களின் நலனிற்காக
மருத்துவ மான யில் ஒழிகிறார்
தமிழ் இன  தலைவர் !!

**********************************

Create a free website or blog at WordPress.com.